சமிந்த வாஸின் 20 ஆண்டு கால சாதனையை நெருங்கிய ஜிம்பாப்வேயின் ரியன் பேர்ல்…!

சமிந்த வாஸின் 20 ஆண்டு கால சாதனையை நெருங்கிய ஜிம்பாப்வேயின் ரியன் பேர்ல்…!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த ஜிம்பாப்வே அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் ரியன் பேர்ல் 3 ஓவர்களில் மட்டுமே பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றுவதற்கு குறைந்தளவான பந்து வீச்சுகள் எடுத்துக்கொண்ட வீரர் என்ற பெருமை இலங்கையின் சமிந்த வாஸிடம் இருக்கிறது.

2003 ஆம் ஆண்டு பங்களாதேஷிற்கு எதிராக 5 விக்கட்டுக்களை சாய்ப்பதற்கு 16 பந்துகளில் மட்டுமே வாஸ் வீசினார், இன்றைய போட்டியில் ரியன் பேர்ல் மொத்தம் 18 பந்துகளை வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

இதன் மூலமாக 20 ஆண்டுகால வாஸின் சாதனையை நெருங்கி ரியன் பேர்ல் இன்றைய போட்டியில் வரலாறு படித்தார், இவரது சிறப்பு பந்து வீச்சு காரணமாக அவுஸ்ரேலியாவை அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து வரலாற்றில் முதன்முறையாக ஜிம்பாப்வே வீழ்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?