தோனிக்கு தற்போது 42 வயதாகிவிட்டது. இவர் ஏற்கனவே கடந்த சீசனில் கோப்பை வாங்கிய பிறகு ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்களின் ஆசைக்காக மீண்டும் ஒரு முறை விளையாடுவதாக கூறியிருந்தார். தற்போது 42 வயது ஆகிவிட்டதால் தோனி நடப்பு சீசனுடன் ஓய்வு பெற போகிறார் என்ற செய்தி வெளியானது.
இந்த நிலையில் தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடாமல் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை கொடுத்துவிட்டு அவர் பயிற்சியாளராக செயல்படலாம் என்றும் கூறப்பட்டது.
அதில் இந்த புதிய சீசனுக்காகவும் புதிய பொறுப்புக்காகவும் என்னால் காத்துக் கொள்ள முடியவில்லை என்று தோனி பதிவிட்டு இருக்கிறார்.
பேஸ்புக்கில் தோனி பதிவு போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. திடீரென்று தோனி இவ்வாறு போட்டுள்ளதால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.