சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு அணிகள்- ஒரே ஒரு கிரிக்கெட் அணி ..!
சமூக வலைத்தளங்களில் விளையாட்டுக் கழகங்களுக்கும் ,விளையாட்டு அணிகளுக்கும் உரிய விருப்ப பக்கங்களில் எந்த அணிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்கிற விபரத்தை தரப்போகிறோம்.
புகைப்படங்கள் அதிகமாக பதிவேற்றப்படும் பிரபலமான இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகமான ரசிகர் விருப்புக்களைப் பெற்றிருக்கும் அணியாக கால்பந்து அணிகளே காணப்படுகின்றன.
இந்த கால்பந்து அணியை பொறுத்தவரையில் பிரபலமான லா லிகா போட்டிகளில் விளையாடி வரும் ஸ்பெயினின் கால்பந்தாட்ட கழகமான ரியல் மேட்ரிட் கழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
ரியல் மேட்ரிட் கால்பந்தாட்ட கழகத்தை தொடர்ந்து 2-வது இடத்தை பார்சிலோனா கழகமும ,தொடர்ந்து 3-வது இடத்தையும் ஜூவன்டஸ் கழகமும் ,4-ஆம் இடத்தையும் PSG கழகமும் , 5வது இடம் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்துகொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைட்டட் கழகம் பிடித்திருக்கிறது .
இன்ஸ்டாகிராம் தளத்திலேயே அதிகமான பார்வையாளர்கள் ,ரசிகர்கள் பின் தொடரும் ஒரே ஒரு கிரிக்கெட் அணியாக இந்திய கிரிக்கெட் அணி காணப்படுகிறது. முதல் 10 இடங்களில் அனைத்தும் கால்பந்தாட்ட அணிகளாக இருக்கின்ற போது, இந்திய அணி மட்டுமே கிரிக்கெட் அணியாக இடம் பிடித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
⚽ரியல் மாட்ரிட்- 103 மில்லியன்
⚽பார்சிலோனா -100 மில்லியன்
⚽ஜூவென்டஸ் -50.9 மில்லியன்
⚽பாரிஸ் செயின்ட் ஜேர்மன்- 50.1 மில்லியன்
⚽மான்செஸ்டர் யுனைடெட்- 48.8 மில்லியன்
? இந்திய கிரிக்கெட் அணி- 20.1 மில்லியன்