சஹான் ஆராச்சியின் தலைமையில் இலங்கை A அணி…!

சஹான் ஆராச்சியின் தலைமையில் இலங்கை A..!

ஆப்கானிஸ்தான் A அணியுடன் அம்பாந்தோட்டையில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு சஹான் ஆராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மே 2ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 பயிற்சிப் போட்டியில் இலங்கை தேசிய அணியில் சில வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதால், முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் 14 பேர் கொண்ட அணியை இலங்கை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை அணி
சஹான் ஆராச்சிகே (கேப்டன்), லஹிரு உதாரா, மினோத் பானுக, நிஷான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, அஹான் விக்கிரமசிங்க, துஷான் ஹேமந்த, வனுஜா சஹான், நிமேஷ் விமுக்தி, சாமிக்க கருணாரத்ன, சாமிக்க குணசேகர, மொஹமட் ஷிராஸ்.

Previous articleபாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மஃரூப் ஓய்வு..!
Next articleஇந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!