டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்; விக்கெட்டுகளையும் முழுவதுமாக வீழ்த்த வேண்டும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்னை கட்டுப்படுத்துவதை தாண்டி விக்கெட்டை முதலில் வீழ்த்துவதுதான் முக்கியம். ரன்னை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை விட்டால், பின்னால் பேட்டிங் செய்யும் அணி கடைசியாக எளிதாக ரன்களை கொண்டுவந்துவிடும்.
டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டை வீழ்த்தியும் ஜெயிக்கலாம்; ரன்னை கட்டுப்படுத்தியும் ஜெயிக்கலாம்.
இதனால் அசுர வேகம், எல்லா வகைமைகளையும் கொண்ட சுழற்பந்து என்றெல்லாம் கட்டாயத் தேவை கிடையாது. நல்ல லைன் அண்ட் லென்த் மற்றும் சிறப்பான கூக்ளிகள் போதுமானது.
டி20 கிரிக்கெட்டின் தேவையை வைத்து யோசித்தாள், இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதல் ஆக மோசமாக எல்லாம் கிடையாது. ஒரே ஒரு இடம் சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது அவ்வளவுதான்.
அந்த இடம் லெக் ஸ்பின்னர் சாகல் இடம். ஏனென்றால் அவருக்கு நல்ல கூக்ளி வீச வராது. கூக்ளிக்கு நல்ல வேகம் இருக்க வேண்டும். அவரிடம் அது கிடையாது.
இதனால் அவர் விக்கெட்டை எடுக்க கீப்பர் அல்லாது மற்ற ஃபீல்டர்களை மட்டுமே நம்பி இருக்கிறார். போல்ட், LBW, கீப்பிங் கேட்ச் இந்த அவுட் வாய்ப்புகள் எல்லாம் இவருக்கு பெரிதாக இல்லை. இதனால் விக்கெட் வாய்ப்புகள் சுருங்குவதால், left-hand பேட்ஸ்மேன்கள் வரும் பொழுதும் கூட ரன்னை கட்டுப்படுத்தும் முடிவுக்கு போக முடிவதில்லை. மேற்கொண்டு left-handed பேட்ஸ்மேன்களுக்கும் பந்தை தூக்கி காற்றில் போட வேண்டிய தேவை உருவாகிறது. இதனால் எளிதாக பவுண்டரி சிக்ஸர் பந்துகளை தந்துவிடுகிறார்.
இந்த இடத்தில்தான் ஆடம் ஜாம்பா right-hand பேட்ஸ்மேன்களை கூட ஃபீல்டர்கள் உதவி இல்லாமல் தானாகவே வீழ்த்தும் அளவில் இருக்கிறார். இந்திய அணி இந்த இடத்தில் எதிர்காலத்தில் பும்ரா, அர்ஸ்தீப், ரவி பிஷ்னோய் என எக்கனாமிக்கல் பந்துவீச்சாளர்களை வைத்து, ரன் அழுத்தத்தை ஏற்றி, விக்கெட்டை வீழ்த்தி வெல்லும் முறையை பின்பற்றிப் பார்க்கவேண்டும்!
✍️ Richards