சாமிகவின் சாதுர்யம் – கௌரவத்தை காப்பாற்றியது இலங்கை..!

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நிறைவுற்றது.

Toss வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

எவ்வாறாயினும், எந்தவொரு இலங்கை துடுப்பாட்ட வீரராலும் அந்த முடிவுக்கு நியாயம் கிடைக்காததால் இலங்கை அணி 85 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

எனினும் பின்வரிசை பேட்ஸ்மேன்களுடன் இணைந்து சமிக்க கருணாரத்ன இலங்கை ஸ்கோர் போர்டை 160க்கு கொண்டு சென்றார். சாமிக்க கருணாரத்ன அபாரமாக துடுப்பெடுத்தாடி 2 அபாரமான சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களைப் பெற்றதோடு, பாட் கம்மின்ஸ், மேத்யூ குஹ்னெமன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

போராட்டத்துக்கு பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது, ஆயினும் இலங்கை தொடரை 3-2 என வென்றது.