சாமிக்க கருணாரத்னவை இறுதி ஓவர்களில் பந்து வீச அனுமதிக்காதது ஏன்- குசல் மெண்டிஸ் விளக்கம்!

சாமிக்க கருணாரத்னவை இறுதி ஓவர்களில் பந்து வீச அனுமதிக்காதது ஏன்- குசல் மெண்டிஸ் விளக்கம்!

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலங்கை அணியை இரண்டு விக்கட்டுகளால் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. பின்னர் 301 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, மழை காரணமாக டக்வோர்த் லூயிஸ் முறைமூலமாக 44 ஓவர்களில் 282 ரன்கள் பெற்று வெற்றிபெற்றது.

அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 80 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதன்பின்னர் போட்டியின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் குசல் மெண்டிஸ் கலந்துகொண்டார், அங்கு போட்டி குறித்து கருத்து தெரிவித்த குசல் மெண்டிஸ், புதுமுக வீரர் துனித் வெல்லாலகே குறித்து கருத்து தெரிவித்ததாவது: “நான் துனித்துடன் விளையாடுவது இதுவே முதல் முறை. இது தனக்கு முதல் போட்டியாக இருக்கும் என்று அவர் பயப்படவில்லை. அழுத்தத்தை சமாளிக்க முடியும். ஒரு கேப்டன் அல்லது மூத்த வீரர் ஏதாவது சொன்னால், அவர் அதைச் செய்ய முடியும். அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித் போன்ற ஒருவரது விக்கெட்டை தனது முதல் விக்கெட்டாகப் பெற்றதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். எதிர்காலத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்.

ஏனென்றால், அணி அவருக்கு என்ன வேண்டும் என்று கூறும்போது, ​​அதைச் செய்யும் திறன் அவருக்கு உள்ளது என தெரிவித்தார்.

கடைசிநேர ஓவரை வீச சாமிக கருணாரத்னவை அனுமதிக்கப்படாததற்கான காரணம் உட்பட முழு செய்தியாளர் சந்திப்பையும் கீழே காண்க. வேகப்பந்தை பயன்படுத்துவதைவிட சுழற்பந்தில் விக்கெட்டை கைப்பற்றலாம் என்று கருதியதாலேயே சாமிகவை பயன்படைத்தவில்லை என தெரிவித்தார்.