சாமிக்க கருணாரத்ன இலங்கையின் டீ வில்லியர்ஸ் – வியக்கும் ரசிகர்கள்..!

சாமிக்க கருணாரத்ன இலங்கையின் டீ வில்லியர்ஸ் – வியக்கும் ரசிகர்கள்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரராக மிளிரும் 25 வயதான சாமிக்க கருணாரத்ன தொடர்பில் பலரது பார்வையும் திரும்பியிருக்கின்றது.

யார் இந்த சாமிக்க கருணாரத்ன என்று சமூக வலைத்தளங்களில் எல்லோரும் தேட ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இளங்கியின் பிரபலமான கொழும்பு ராயல் கல்லூரின் முன்னாள் அணித்தலைவரான சாமிக்க கருணாரத்ன, மிகச்சிறந்த சகலதுறை வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

இன்று தன்னுடைய 6 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய சாமிக்க கருணாரத்ன, அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 44 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொண்டார்.

அது மாத்திரமல்லாமல் முதலாவது ஒருநாள் போட்டியில் இதேபோன்று 35 பந்துகளில் ஆட்டம் இழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

2 போட்டிகளையும் சேர்த்து அதிரடியாக 6 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் சாமிக்க கருணாரத்ன விளாசியுள்ளமை இலங்கை ரசிகர்களுக்கு பலத்த நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

6 வது ஒருநாள் போட்டியில் 5 தடவை துடுப்பாடும் சந்தர்ப்பம் கிட்டியுள்ள சாமிக்க கருணாரத்ன, 19*, 21, 11, 43*, 44* என மொத்தமாக 148 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதிலே 3 தடவை ஆட்டமிழ்க்கவில்லை என்பதும் முக்கியமானது.

இவரது சகோதரரான நிலுக்க கருணாரத்ன இலங்கையை பயன்படுத்தி பாட்மிண்டன் போட்டிகளில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றார்,

அத்தோடு சாமிக்க கருணாரத்னவும் ஒரு பாட்மிண்டன் வீரர் என்பதும் சிறப்பம்சம், அதைவிடவும் அவரது இரு சகோதரர்களான டிலுக்க கருணாரத்ன , டினுக கருணாரத்ன ஆகியோரும் பாட்மிண்டன் வீரர்களை, அவரது தந்தையாரும் பாட்மிண்டன் வீரராக திகழ்ந்தவர்.

அத்தோடு சாமிக்க கருணாரத்ன , கொழும்பு ரோயல் கல்லூரியின் மிகச்சிறந்த 100 M ஓட்ட வீரராகவும் சாதித்துள்ளார்.

ஆகமொத்தத்தில் தடகளம், பாட்மிண்டன் , கிரிக்கெட் என்று சகலதுறைகளிலும் தன்னை அடையாளப்படுத்தி இப்போது இலங்கையின் மிளிரும் கிரிக்கெட் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி நட்சத்திரமான டீ வில்லியர்ஸ் கிரிக்கெட் தவிர கால்பந்து, ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட பல்துறை திறமையாளனாய் ஜொலித்தது போன்று, இப்போது கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் இலங்கையின் சாமிக்க கருணாரத்னவும் பல்துறை ஆற்றல் கொண்டவராவார்.

இதனால் விளையாட்டு ரசிகர்கள் இவரை அடுத்த டீ வில்லியர்ஸ் என்று புகழ்ந்து வருகின்றனர்.