சாம்பியன்ஸ் டிராபி- பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபர் அசாம்-க்கு புதிய பொறுப்பு.. அதிரடி வீரர் இல்லை

சாம்பியன்ஸ் டிராபி- பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபர் அசாம்-க்கு புதிய பொறுப்பு.. அதிரடி வீரர் இல்லை

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கு பெறும் இந்த தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. 1996 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தானில் முதல்முறையாக ஐசிசி தொடர் நடைபெறுகிறது.

இதனால்,அந்த நாட்டு மக்கள் இந்த போட்டிகளை மிகவும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த சூழலில் பாகிஸ்தான் அணி தான் கடைசியாக 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முகமது ரிஸ்வான் தலைமையில் 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படாத ஃபக்கர் சமான் தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பிருக்கிறார். இதேபோன்று பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரர் சயிம் அயூப் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவில்லை.

இதனால் ஃபக்கர் சமான் தொடக்க வீரராக பாபர் அசாம் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று ஃபஹிம் ஆஸ்ரஃப்,குஸ்தில் ஷா மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் ஒரு நாள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். பாகிஸ்தான அணி கடைசியாக 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை வென்றபோது, அதிலிருந்த பாபர் அசாம், ஃபஹிம் அஷ்ரஃப்,ஃபக்கர் சமான் ஆகிய மூன்று பேர் மட்டும் தான் தற்போது மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

வேகப்பந்துவீச்சார்களாக ஹாரிஸ் ரவுஃப், முகமத் ஹஸ்னாயின், நசீம் ஷா, சாஹின் அஃப்ரிடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளராக அப்ரார் அகமத் அணியில் இருக்கின்றார். பாகிஸ்தான் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்வு குழு தலைவர் ஆஷாத் சபீக், உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக சயிம் அயூப்,இந்த தொடரில் விளையாடது பெரிய பின்னடைவாக இருந்தாலும், அவருக்கு பதில் பாபர் அசாம் அல்லது சவுத் சகில் தொடக்க வீரராக களமிறங்க கூடும் என்று கூறியுள்ளார். அனைத்து கள சூழலுக்கும், அணியின் அனைத்து இடத்திற்கும் சரியான வீரர்களை நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ள ஆசாத் சபிக், பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்க்கு முன்பு நடைபெறும் முத்தரப்பு தொடரிலும் இதே அணி பங்கேற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் முத்தரப்பு தொடருக்கான பாகிஸ்தான் அணி :ரிஸ்வான் (கேப்டன்), பாபர், ஃபகர் சமான், கம்ரான் குலாம், ஷவுத் ஷகீல், தாஹிர், ஃபஹீம் அஸ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது,ஹரிஸ் ரவுஃப், ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஆப்ரிடி