சாம்பியன்ஸ் லீக் கிண்ண இறுதி போட்டி!!! வெற்றி வாய்ப்பு யார் பக்கம்?

சாம்பியன்ஸ் லீக் கிண்ண இறுதி போட்டி!!!
வெற்றி வாய்ப்பு யார் பக்கம்?

இந்த பருவகாலத்துக்கான(2020/21) UEFA Champions League இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. Premier League கழகங்களான Manchester City மற்றும் Chelsea அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

இறுதி போட்டிக்கு முன்னதாக இரு அணிகளினதும் வெற்றி வாய்ப்பு மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் ஒரே தொகுப்பாக இதோ.

Premier League கழகங்களினது மோதல்.

இம்முறை இறுதி போட்டிக்கு தேர்வாகி இருப்பது இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Premier League தொடரைச் சார்ந்த இரு கழகங்கள்.

இதே போன்று 2019 ஆம் ஆண்டு Liverpool மற்றும் Tottenham Hotspur அணிகள் மோதி இருந்தன.

அத்துடன் தொடர்ந்து 3 ஆவது முறையாக La Liga கழகங்கள் இறுதி போட்டிக்கு தேர்வாக தவறி உள்ளன. இறுதியாக La liga சார்பாக இறுதி போட்டியில் பங்கேற்ற அணி 2018 இல் Real Madrid. அவ் வருடம் Real Madrid வெற்றி பெற்று தொடர்ந்து 3 ஆம் முறையாக கிண்ணத்தை வென்றிருந்தது.

UCL Finalists

2020
Bayern Munich?? 1-0 Paris Saint German??

2019
Liverpool??????? 2-0 Tottenham Hotspurs???????

2018
Real Madrid?? 3-1 Liverpool???????

2017
Real Madrid?? 4-1 Juventus??

2016
Real Madrid?? 1*-1 Atletico Madrid??

2015
Barcelona?? 3-1 Juventus??

2014
Real Madrid?? 4-1 Atletico Madrid??

2013
Bayern Munich?? 2-1 Borussia Dortmund??

2012
Chelsea??????? 1*-1Bayern Munich??

Chelsea

இம்முறை Chelsea அணி சற்று முரணாகவே செயற்பட்டுள்ளது. இந்த பருவகால போட்டிகளின் ஆரம்பத்தில் Frank Lampard Chelsea அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்தார். அவரின் கீழ் Chelsea அணி தொடர்ந்தும் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்த இந்த சீசன் இன் பாதியில் Chelsea நிர்வாகம் Lampard ஐ நீக்கி Thomas Tuchel ஐ தலைமை பயிற்றுவிப்பாளராக நியமித்தது.

அன்றிலிருந்து Chelsea அணியின் ஆதிக்கம் ஆரம்பமானது. Premier League இல் முதல் 6 இடங்களுக்குள் இடம்பிடிக்க தட்டு தடுமாறி வந்த Chelsea Thomas Tuchel இன் கீழ் Premier League புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்தில் இந்த பருவகால போட்டிகளை நிறைவு செய்துள்ளது.

அத்துடன் UCL இலும் Chelsea அணி Atletico Madrid Real Madrid என பலம் பொருந்திய La Liga கழகங்களை வெளியேற்றி இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளது.

அத்துடன் 2012 இல் Chelsea அணி Champions League கிண்ணம் வெற்றி பெற்றிருந்ததுடன் 2012 மற்றும் 2021 Chelsea அணிக்கு பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
2012 இலும் நடப்பு பருவகால போட்டிகளின் இடை நடுவே தலைமை பயிற்சியாளர் மாற்றம் பெற்று அந்த சீசன் Champions League கிண்ணத்தை வென்றிருந்தது. அதே போன்று இம்முறையும் Chelsea அணி கிண்ணம் வெல்லும் என ரசிகர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

Manchester City

Richest Club என அறியப்படும் Manchester City சமீப காலமாக Pep Guardialo இன் கீழ் Premier League, FA Cup, EFL CUP, Community Shield என ஒரு Premier League கழகம் வெல்லக்கூடிய அனைத்து கிண்ணங்களையும் வென்றிருந்தாலும் ஐரோப்பாவின் மிக கௌரவமாக கருதப்படும் Champions League கிண்ணம் அவர்களின் கைகளில் இருந்து தவறி வந்தது. இம்முறை அதை தகர்க்கும் முகமாக முதல் முறையாக இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளது Manchester City.

Champions League கிண்ணத்தை இம்முறை வென்று ஐரோப்பாவின் ஆகச் சிறந்த கழகம் என தம்மை நிரூபிக்க காத்திருக்கின்றனர் Pep Guardialo மற்றும் Manchester City.

Pep Vs Tuchel

Thomas Tuchel இவ்வருட ஜனவரி மாதத்தில் Chelsea அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து பிற முன்னணி அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

Tomas Tuchel பதவியேற்றதில் இருந்து Chelsea Vs Manchester City போட்டி முடிவுகள்.

FA Cup
Chelsea 1-0 Manchester City

Premier League
Chelsea 2-1 Manchester City

இரு முறை நேரடியாக மோதி இரு முறையும் Pep Guardialo இன் Manchester City ஐ வீழ்த்தியுள்ளார் Thomas Tuchel. எனினும் மிக முக்கியமான போட்டியான நாளைய போட்டியில் மீண்டும் Tuchel சாதிப்பாரா அல்லது Guardialo Tuchel இன் வெற்றியை தகர்ப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இப் போட்டி நாளை சனிக்கிழமை(29th May) Porto இல் இடம்பெற உள்ளது.
இலங்கை நேரப்படி ஞாயிறு (30th May) அதிகாலை 12.30 கு ஆரம்பமாகும்.
Sony Ten network (Sony Ten 2/3) இல் இப் போட்டி இலங்கையில் ஒளிபரப்பாகும்.