சாம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் முதல் நாள் முடிவுகள்- பார்சிலோனா தோல்வி, யுவென்டஸ் வெற்றி..!

சாம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் முதல் நாள் முடிவுகள்- பார்சிலோனா தோல்வி, யுவென்டஸ் வெற்றி..!

கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்து கால்பந்து திருவிழாவான சாம்பியன் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று  ஆரம்பித்தது.

இந்த போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியுள்ளது.

பிரபலமில்லாத யங் பாய்ஸ் அணியுடனான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் 2-1 தோல்வியை தழுவியது.

இதே நேரத்தில் மெஸ்ஸி யில்லாமல்  முதல் முறையாக சாம்பியன் லீக் ஆட்டத்தில் களம் குதித்த பார்சிலோனா அணி 0-3 என தோற்றது.

இறுதியாக பெயர்ன் மூனிச், பார்சிலோனா அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் 8-0 என பார்சிலோனாவை,  பெயர்ன் மூனிச் தோற்கடித்து இருந்தமை இங்கே நினைவுபடுத்ததக்கது.

இதேபோன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் விளையாடினாலும் யுவென்டஸ் 3-0 என வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற சாம்பியன் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முழுமையான விபரம் ?????

⚽ யங் பாய்ஸ் vs மேன்செஸ்டர் யுனைடெட் (2-1)

⚽ செவில்லா vs சால்ஸ்பர்க் (1-1)

⚽ பார்சிலோனா vs பேயர்ன் முனிச் (0-3)

⚽ செல்சி vs ஜெனிட் (1-0)

⚽ டைனமோ கியேவ் vs பென்ஃபிகா (0-0)

⚽ லில்லி vs வுல்ஃப்ஸ்பர்க் (0-0)

⚽ மால்மோ எஃப்எஃப் vs ஜுவென்டஸ்.          (0-3)

⚽ வில்லேரியல் vs அட்லான்டா (2-2)