சாருஜன் சண்முகநாதன் ❤️

கிரிக்கெட்டை எப்படியும் விளையாடலாம், கிரிக்கெட்டை எல்லோராலும் விளையாடலாம், ஆனால் கிரிக்கெட் போட்டி ஒன்றின் ஒரு இன்னிங்ஸை கட்டமைத்து அணியின் நிலைமைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு ஓட்டங்களை சிறுக சிறுக சேகரித்து அணியின் வெற்றிக்கு பெருவாரியாய் பங்களிப்பு ஆற்றுவது என்பது மிகப் பெரிய ஒரு கலை ❤️

அந்தக் கலையம்சத்தை இன்றைய இன்னிங்ஸ் முழுவதுமாகவே நமக்கு காண்பித்து இருக்கிறான் சாருஜன் சண்முகநாதன் ❤️

கடந்த ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண போட்டிகளின் போது விராட் கோலி இப்படியான பல இன்னிங்ஸ்களை விளையாடினார் 👌

விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட பெரும் பணி ஆங்கர் ரோல் எனப்படுகின்ற ஒரு பக்கத்தில் விக்கெட்டுக்கள் சரியா வண்ணம் தன்னை தற்காத்துக் கொண்டு ஓட்டங்களையும் சிறுகச் சிறுக சேகரித்து இறுதி வரைக்கும் ஆடுகளத்தில் நிற்பது ஆகும் .

இப்படியான ஒரு இன்னிங்ஸ் ஆடுகின்ற போது பல்வேறு வகைப்பட்ட விமர்சனங்கள் தாராளமாய் உலாவும், Strike rate தொடர்பிலே பேசுவார்கள், Selfish என்று சொல்வார்கள், Personal milestone க்காக மந்தகதி ஆட்டம் என்பார்கள், இப்படியான விமர்சனங்கள் தாராளமாய் வரும், இப்படியான ரோலை ஒரு அணியின் எல்லா வீரர்களுக்கும் அணி நிர்வாகம் கொடுப்பதும் இல்லை. எல்லா வீரர்களாலும் இவ்வாறான ஒரு ரோலில் பேட்டிங் செய்யவும் முடியாது.

கிட்டத்தட்ட இன்றைய இன்னிங்ஸ் எனக்கு விராட் கோலி கடந்த #worldcup2023 தொடரிலே ஆடிய பல இன்னிங்ஸ் களை நினைவுக்கு கொண்டு வந்தது 👏

தன் மகன் இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்துடைய கிரிக்கெட் வீரனாய் வளர்ந்து வருகிறான் என்கின்ற எதுவித பெருமைத்தனமும் இல்லாத ஒரு தந்தையாகவும், தான் எதிர்காலத்தை ஆளப்போகின்ற கிரிக்கெட்டராகி கொண்டிருக்கிறேன் என்கின்ற எதுவிதமான மமதையும் இல்லாமை தான் இந்த இருவர் மீதான என் பேரபிமானத்திற்கு காரணங்கள் எனலாம். நிலை உயரும் போது பணிவு கொள்ளல் அழகு ❤️

சிறு வயது முதலே இருவரோடும் நெருங்கி பழகுபவன் என்கின்ற அடிப்படையில் பெருமை ❤️

எத்தனையோ கிரிக்கெட்ர்களோடு படம் எடுத்து சேமிப்பில் வைத்திருக்கிறேன், ஆனால் இந்த படம் கொஞ்சம் விசேஷமானது. இவன் எதிர்காலத்தை ஆளும் கிரிக்கெட்டராக வருவான் என்று அவர் தந்தைக்கு முன்பாகவே சொல்லி ஒரு படம் எடுக்க கிடைத்தது, சூரியன் வானொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது எடுத்துக் கொண்ட ஒரு படம் 📷

சாருஜனுக்கு நீண்ட நெடிய எதிர்காலம் காத்திருக்கிறது, தந்தையாய் Nathan Shanmuganathan பெருமையுறும் தருணம் 👏

வாழ்த்துகள் ✌️

#SLvAFG #Asiacup2024

Previous articleமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ODI தொடர்- பங்களாதேஷ் அணி அறிவிப்பு..!
Next articleவோர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் ..!