சின்னப் பையனுக்கு கூட அந்த அறிவு இருக்கு.. ராஜஸ்தான் வீரரால் இஷான் கிஷனை வெளுக்கும் ரசிகர்கள்!

சின்னப் பையனுக்கு கூட அந்த அறிவு இருக்கு.. ராஜஸ்தான் வீரரால் இஷான் கிஷனை வெளுக்கும் ரசிகர்கள்!

ஆர்சிபி அணியின் க்ருனால் பாண்டியா பவுலிங்கில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான துருவ் ஜுரெல் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். உடனடியாக துருவ் ஜுரெல் டிஆர்எஸ் முறையீடு செய்த போது, பேட்டில் எட்ஜாகியது தெரிய வந்தது. இதனால் ஐதராபாத் அணியின் இஷான் கிஷனை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி மாஸ் தொடக்கம் கொடுத்தது.

8.1 ஓவர்களில் 100 ரன்கள்
அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்களையும் விளாசினர். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 8.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக குவிக்கப்பட்ட 2வது 100 ரன்களாகும். இதன்பின் ரியான் பராக் – நிதிஷ் ராணா கூட்டணி இணைந்து அபாரமாக ஆடி வந்தது.

துருவ் ஜுரெல் டிஆர்எஸ்
ஆனால் க்ருனால் பாண்டியா பவுலிங்கில் ரியான் பராக் கொஞ்சம் கூட பொறுப்பின்றி 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த ஓவரின் 5வது பந்திலேயே இளம் வீரர் துருவ் ஜுரெலுக்கு எம்பிடபிள்யூ முறையீடு செய்த போது, நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் உடனடியாக துருவ் ஜுரெல் டிஆர்எஸ் முறையீடு செய்தார். அப்போது க்ருனால் பாண்டியா வீசிய பந்து பேட்டில் பட்டு, பேடில் அடித்தது தெரிய வந்தது.

இஷான் கிஷன் vs ஜுரெல்
இதனால் துருவ் ஜுரெல் மீண்டும் பேட்டிங் ஆட தொடங்கினார். 21 வயதாகும் துருவ் ஜுரெல், உடனடியாக டிஆர்எஸ் முறையீடு செய்து தனது விக்கெட்டை காப்பாற்றி கொண்டுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக ஆடிய ஐதராபாத் அணியின் இஷான் கிஷனுக்கு இந்த அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் நேற்று விக்கெட்டை பறிகொடுத்து சென்றுள்ளார்.

இஷான் கிஷனின் சொதப்பல்
தீபக் சஹர் வீசிய பந்தை இஷான் கிஷன் அடிக்க முயற்சித்த போது, அதனை அடிக்க முடியவில்லை. அது நேராக விக்கெட் கீப்பர் ரிக்கல்டனிடம் சென்றது. அப்போது அம்பயர் ஒய்டு கொடுக்க கைகளை உயர்த்திய நிலையில், திடீரென இஷான் கிஷன் நடந்து செல்ல தொடங்கினார். இதனால் நடுவர் உடனடியாக அவுட் கொடுக்க, எந்த சந்தேகமும் இல்லாமல் இஷான் கிஷன் வெளியேறினார்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்
ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது இஷான் கிஷனின் பேட்டில் பந்து படவில்லை என்பது தெரிய வந்தது. டிஆர்எஸ் முறையீடு செய்திருந்தால், இஷான் கிஷன் விக்கெட் கிடைத்திருக்காது. இதன் காரணமாக ஐதராபாத் அணி 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் துருவ் ஜுரெலுக்கு உள்ள தெளிவு கூட இஷான் கிஷனுக்கு இல்லை என்று ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

Previous articleஆர்சிபி ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. சோகமான ரசிகர்கள்.. 2 ஓவரில் கதையை மாற்றிய ஜோஷ் ஹேசில்வுட்