சுவிட்சர்லாந்து அடங்கலாக ICC யில் 3 உறுப்பு நாடுகள் இணைந்தன…!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நேற்று தனது புதிய உறுப்பு நாடுகளான மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்தை ஐ.சி.சியின் 78 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அங்கத்துவ நாடுகளாக வரவேற்றது.
மங்கோலியா மற்றும் தஜிகிஸ்தானை ஆசிய பிராந்தியத்தின் 22 மற்றும் 23 வது உறுப்பினர்களாக வரவேற்றது, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் 35 வது உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி இப்போது மொத்தம் 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அதிலே 12 டெஸ்ட் அந்தஸ்துடைய நாடுகள் 94 அசோசியேட்ஸ் என்பதும் கவனிக்கத்தக்கது.