சுவிஸ்லாந்தின் யூரோ வெற்றியை ரத்து செய்யுங்கள்- பிரான்ஸ் ஆதரவாளர்கள் மனுத்தாக்கல் (விசித்திர சம்பவம்)
பிரான்சிற்கும்சுவிஸ்லாந்திற்கும் இடையிலான யூரோ 2020 ரவுண்ட் -16 போட்டியை மீண்டும் நடத்தக் கோரும் ஆன்லைன் மனுவில் ஏராளமான மக்கள் கையெழுத்திட்டுள்ளமை கால்பந்து உலகில் பெருத்த பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
இந்த மனுவை பிரெஞ்சு வலைத்தளமான லெஸ் லிக்னெஸ் பூஜெண்டில் லெஸ் ப்ளூஸின் வேதனைக்குள்ளான ரசிகர் ஒருவர் வெளியிட்டார், அவர் பெனால்டி ஷூட்அவுட்டின் முடிவில் உணரப்பட்ட அநீதியைப் பற்றி மறுபரிசீலனை செய்யா கோரியமை குறிப்பிடத்தக்கது., சுவிட்சர்லாந்து 5-4 என்ற கணக்கில் குறித்த போட்டியை வென்றது, இதன் மூலமாக நடப்பு உலக சாம்பியன்களை போட்டிகளில் இருந்து வெளியேற்றியது சுவிட்சர்லாந்து .
விளையாட்டின் சட்டங்களின்படி, கைலியன் ம்பாப்பேவின் தீர்க்கமான ஸ்பாட் கிக் (Spot Kick) தடுப்பதற்கு முன்பு சுவிஸ் கோல்கீப்பர் யான் சோமர் கோல் கோட்டின் மீது அல்லது பின்னால் அவரது கால் தொட்டுக்கொண்டிருந்தது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
“பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து போட்டிக்கான பெனால்டி ஷூட்அவுட்டின் போது, எம்பேப்பின் உதையின் போது கோல்கீப்பர் சோமர் தனது வரிசையில் இல்லை என்றும் இதனால் சுவிட்சர்லாந்தின் தகுதி ரத்து செய்யப்படுவதை நாங்கள் கோருகிறோம், எனவே போட்டியை மீண்டும் நடத்த வேண்டும். விளையாட்டு விதிகளுக்குள் அமைவாக எந்தவொரு போட்டியும் விளையாடப்பட வேண்டும் ஆனால் அன்றைய நாளில் விதிகள் மதிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆச்சரியப்படும் விதமாக, இந்த மனு பிரான்ஸ் ஆதரவாளர்களிடமிருந்து 270,000 கையெழுத்துக்களை ஈர்த்தது. இந்த இடுகை பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் ஏராளமான ஊடக கவனத்தைப் பெற்றது.
இப்போது இந்த விடயம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sommer's foot leaves the line moments before Mbappé shoots but he times the push perfectly and it's back on the line when the penalty is taken.
— Jacopo Piotto (@jacopopiotto) June 28, 2021
This is mad technique by Sommer. Kept one foot on the line. pic.twitter.com/8LoHJbIUIf
— Clint. (@CleanThing_) June 28, 2021