சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழப்பில் நடந்தது என்ன? கிரிக்கட் விதி என்ன சொல்கின்றது ?

  1. இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின் போது பல்வேறு விதமான சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதலாவது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உடனேயே மேலே கையை தூக்கி காட்டிக் கொண்ட ஷிகார் தவானின் நிகழ்வு ஆரம்பம் முதலே ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் பேசப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து போட்டியின் 23-வது ஓவரில் விளையாடியபோது சூரியகுமார் யாதவிற்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு ரசிகர்களை பேச வைத்திருக்கிறது .

இந்த ஆட்டமிழப்பு விதிமுறைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

23வது ஓவரை வீசிய பிரவீன் ஜெயவிக்ரம வீசிய பந்தை ஸ்வீப் ஷாட் முறை மூலமாக ஆடுவதற்கு சூரியகுமார் முனைந்தார், ஆனாலும்கூட அவரால் துடுப்பெடுத்தாட முடியாதபோக அவருடைய முன்னம் கால் காப்பில் பந்து பட்டது.

இதன் காரணத்தால் ஆட்டமிழப்பு கோரப்பட்டபோது களநடுவர் தர்மசேன விரலை உயர்த்தி ஆட்டம் இழப்பாக அறிவித்தார்.

அதன் பின்னர் சூரியகுமார்  டிஆர்எஸ் முடிவுக்கு செல்ல தீர்மானித்தார் ,தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிஆர்எஸ் முடிவை வழங்குவதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஐந்து நிமிடத்திற்கும் அதிகம் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

ஆனாலும்கூட அங்கே 3 வது நடுவரால் ஆட்டமிழப்பு பரிசீலிக்கப்பட்டபோது இலங்கை வீரர்கள் முன்னதாகவே முடிவை கொண்டாடியமை இப்போது பேசப்படுகின்றது.

சூர்யகுமார் யாதவ் ஸ்டம்பிலிருந்து 2.5 மீட்டருக்கும் மேலாக தனது காலை நகர்த்தியதால், ஸ்டம்பின் கோட்டிற்கு வெளியே Impact இருப்பதாக பந்து கணிப்பு காட்டியது.

Impact வெளியில் வந்தவுடன், முடிவை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் மூன்றாவது நடுவர் ஆச்சரியப்படும் விதமாக பந்து ஸ்டம்புகளைத் தாக்குகிறதா என்று பார்க்க முன்னேறினார், அதுவே இலங்கை வீரர்களின் கொண்டாட்டத்தின் காரணமாகும்.

கிரிக்கெட் விதி முறையை அறிந்து கொள்ளாமல் வீரர்கள் முடிவை கொண்டாடியது ட்விட்டர் வாசிகளால் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற அல்லது Troll செய்யப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது.

பந்தின் தாக்கம் ஸ்டம்புகளின் கோட்டிற்கு வெளியே இருப்பது தெளிவாகக் காட்டப்பட்டது, இதன் பொருள் பேட்ஸ்மேனை வெளியே அனுப்பமுடியாது. ஆனால் இங்குதான் குழப்பம் தொடங்கியது.

The impact of the ball was clearly shown to be outside the line of the stumps, which meant the batsman cannot be given out.

இந்த செயல்முறையை நிறுத்திவிட்டு, ஆன்-பீல்ட் நடுவரது முடிவை மாற்றியமைக்கச் சொல்வதற்குப் பதிலாக, மூன்றாவது நடுவர் பந்து ஸ்டம்புகளைத் தாக்கச் சென்றதை திரையில் காண்பிக்கசெய்தார்.

Instead of stopping the process and asking the on-field umpire to reverse his decision, the third umpire decided to complete the replay where the ball went on to hit theமூவரிடம்

பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்ததாக திரையில் காட்டப்படுகின்ற போது, நடுவரின் முடிவை மாற்றுவதற்கு கோருவதற்கு முன்பாகவே இங்கே சர்ச்சையும் ரசிகர்களின் கொண்டாட்டமும் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.