மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வந்திருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 164 ஓட்டங்களைப் பெற்றது, 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் அதிரடி நிகழ்த்த இலகுவாய் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.
அவர் 44 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
165 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
போட்டியின் சுருக்கம்
WI 164-5 (20)
கைல் மேயர்ஸ் 73(50), ரோஹ்மன் பவல் 23(14), நிக்கோலஸ் பூரன் 22(23)
புவனேஷ்வர் குமார் 35/2, ஹர்திக் பாண்டியா 19/1
இந்தியா 165-3 (20)
சூர்யகுமார் யாதவ் 76(44), ரிஷப் பந்த் 33(26)*, ஷ்ரேயாஸ் ஐயர் 24(27)
அகீல் ஹொசைன் 28/1, ஜேசன் ஹோல்டர் 30/1