சென்னைக்கு 10 ,ஜோ ரூட்டுக்கு 5 -இரட்டை சதம்

சென்னைக்கு 10 ,ஜோ ரூட்டுக்கு 5 -இரட்டை சதம்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம் பெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்துக்கொண்டிருக்கிறது .

இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் சற்றுமுன்னர் ஆட்டமிழக்காது ஐந்தாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் .

100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனையையும் இந்த இரட்டை சதத்தின் மூலம் ஜோ ரூட் தனதாக்கினார் .

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் 2 இரட்டை சதம் ,1 சத்த்தையும் பெற்று கொண்டுள்ளமையும் சிறப்பம்சமாகும் .

இதைவிடவும் ஆசிய மைதானங்களில் அதிக இரட்டை சதம் விளாசப்பட்ட மைதானமாக இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் சாதனை படைத்துள்ளது .

சென்னை மைதானத்தில் இதுவரைக்கும் பத்து இரட்டைச் சதங்கள் விளாசப்பட்டுள்ளன .இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 4 விக்கட்டுக்களை இழந்து 454 ஓட்டங்களை குவித்துள்ளது .

அதிக இரட்டைச் சதம் பெறப்பட்ட ஆசிய மைதானங்கள்

10 – சென்னை*

10 – லாஹூர்

9 – கொழும்பு SSC

8 – காலி

7 – டெல்லி

7 – கராச்சி

#INDvsENG

Tea Break -2.10 PM