சென்னையின் முக்கிய வீர்ர் திடீர் ஓய்வு …!

நடப்பு ஐபிஎல் தொடரிலும் CSK அணிக்காக சிறப்பான நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும் அம்பத்தி ராயுடு சற்று முன்னர் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் ரசிகர்கள் அனைவரின் மனதையும் உடைக்கும் விதத்தில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நடப்பு ஐபிஎல் தொடர் உடன் நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதுவே என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர்.

13 வருடங்களில் இரண்டு சிறந்த அணிகளுக்கு விளையாடிய சந்தோஷமும் பெருமையும் எனக்குள் எப்பொழுதும் இருக்கும்.

இந்த 13 வருடங்கள் எனக்கு அற்புதமாக கழிந்தது. இந்த நேரத்தில் எனக்கு அற்புதமான பயணத்தை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று அம்பத்தி ராயுடு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 114 போட்டிகளில் விளையாடி 2416 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 27.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 126.16ஆகும். சென்னை அணியில் தற்பொழுது வரை 73 போட்டிகளில் விளையாடி 1771 ரன்கள் சென்னை அணியில் தற்போது வரை இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 32.80 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 128.80ஆகும்.

ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் தற்போது வரை 4187 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 29.28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.26.ஆகும்.

 

MI உடன் IPL 2013, 2015 & 2017 ஆகிய ஆண்டுகளில் IPL வெற்றியாளர் ?

CSK உடன் IPL 2018 & 2021ஆகிய ஆண்டுகளில் IPL வெற்றியாளர் ?

நினைவுகளுக்கு நன்றி, அம்பதி ராயுடு ??