சென்னையில் 2 வது டெஸ்ட்டில் வரும் புதிய நடைமுறைகள்…!

சென்னையில் 2 வது டெஸ்ட்டில் வரும் புதிய நடைமுறைகள்…!

பெப்ரவரி 13 ம் திகதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

சென்னை ரசிகர்கள் மைதானத்தில் இருந்து சத்தமாக ஆரவாரம் செய்வதை அடுத்த டெஸ்ட்டில் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக சர்ச்சைக்குள்ளான மூன்று ஸ்டாண்டுகளும் ரசிகர்களுக்காக திறக்கப்படும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டுதல்களை தமிழக கிரிக்கெட் சங்கம் (TNCA) அறிவித்துள்ளது.

COVID-19 நெறிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.மாஸ்க் அணிந்து, இடைவெளி விட்டு, கூட்டமாக இருப்பதை தவிர்க்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் சங்கம் பிப்ரவரி 8, 2021 அன்று ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது, “கோவிட் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் அனைத்து நபர்களுக்கும் எதிராக அதிகாரிகள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தமிழக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி கையெழுத்திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆகவே சென்னை போட்டிக்கு வரும் ரசிகர்கள் மைதானத்தில் கொரோனா விதிமுறைகளை கடைப்பைடித்து போட்டியை பார்ப்பது அவசியமாகின்றது.