சென்னை அணியில் தல தோனி தொடர்வாரா- புதிய IPL விதிமுறையால் வரும் சிக்கல்..!

சென்னை அணியில் தல தோனி தொடர்வாரா- புதிய IPL விதிமுறையால் வரும் சிக்கல்..!

2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக நான்கு வீரர்களை மட்டுமே IPL உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், ‘தல’ தோனியை CSK தக்கவைத்துக் கொள்ளுமா என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ். தோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஆயினும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு அவர் தொடர்ந்து கேப்டனாக திகழ்கின்றார்.

2020 ஆம் ஆண்டில் அணியின் மோசமான செயற்பாட்டால் ரசிகர்களை ஏமாற்றிய CSK அணி, முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற தவறியது.

ஆயினும் நடப்பு ஆண்டில் தோனி அணியின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளார், இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று காரணமாக, மே மாதத்தில் ஐபிஎல் 2021 நிறுத்தப்பட்டபோது புள்ளிகள் அட்டவணையில் சிஎஸ்கே 2 வது இடத்தில் இருந்தது.

இப்போது 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக நான்கு வீரர்களை மட்டுமே ஐபிஎல் உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், ‘தல’ தோனியை (MS Dhoni) சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளுமா என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கருத்துப்படி, தோனி கண்டிப்பாக அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சென்னை அணியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு எதிர்காலத்திற்கான ஒரு அணியை உருவாக்க தோனியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே அந்த 4 வீரர்களும் யாராக இருப்பார்கள் எனும் கேள்வியும் ரசிகர்களுக்கு வராமல் இல்லை.