இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றைய நாளில் நிறைவுக்கு வந்திருக்கிறது.
மூன்று போட்டிகளிலும் அபார திறமையை வெளிப்படுத்திய இங்கிலாந்து தொடரை 3-0 என்று வெற்றிக் கொண்டு அசத்தியது.
இந்த போட்டி தொடரில் தொடர் நாயகன் விருது ஐபிஎல் போட்டிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சாம் கரனுக்கு கிடைத்திருக்கிறது.
இதிலே குறிப்பிடக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் இரண்டாவது போட்டியின்போது பந்து வீசிக்கொண்டு எதிரில் துடுப்பெடுத்தாடிய துடுப்பாட்ட வீரர் அடித்த பந்தை ஃபுட்பால் வீரர்கள் போன்று காலால் தட்டி ஒரு அபூர்வமான ரன் அவுட் சாதனையை நிகழ்த்தினார்.
ரசிகர்களை பொறுத்தவரையில் இந்த சாதனையை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கையால் எடுத்து விக்கெட்டை பதம் பார்க்காமல், கால்பந்து வீரர்கள் போன்று காலால் அடித்து விதத்தையும் பார்த்து கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்களையும் குஷிப்படுத்துகிறது.
சென்னையின் சுட்டிகுழந்தை கரனை கொண்டாடுவோம்.
Video link
Call him up @GarethSouthgate! ⚽ #ENGvSLpic.twitter.com/yI0s3yQ9Ar
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 24, 2021