சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையக் காத்திருக்கும் மூன்று தமிழக வீரர்கள் -சிஎஸ்கே இன் அதிரடி திட்டம் …!
15 வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் ,அது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றன.
வழமையாக இடம்பெறும் 8 அணிகளுக்கு மேலதிகமாக 2 அணிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன, இதனால் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மெகா ஏலத்தில் தக்கவைக்கப்படாத வீரர்களை எந்த எந்த அணிகள் உள்வாங்கிக்கொள்ள போகின்கின்றன எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ள நிலையில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் மூன்று தமிழக வீரர்களை குறிவைத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் , ஷாருக் கான் ஆகிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கு வைத்து வளைத்துப் போட காத்திருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன .
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதன்மை தேர்வாக ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கு தக்கவைத்தது. அவருக்கு பின்பு தான் தோனி தக்கவைக்கப்பட்டார். 3வது மற்றும் 4வது தேர்வுகளாக இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை அணி அடுத்தாண்டு யாரையெல்லாம் ஏலம் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் அஸ்வின் கண்டிப்பாக இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அடுத்த ஆண்டு இடம்பெறப் போகின்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் எந்த எந்த வீரர்கள் விளையாடுவார்கள் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.