சையத் முஷ்டாக் அலி தொடர்- தமிழ்நாடு அணி அறிவிப்பு , சங்கர் நீக்கம் , அபராஜித் தலைவர்…!

2022 ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான தமிழ்நாடு அணியை அறிவித்துள்ளது,

நடப்பு சாம்பியனான தமிழ்நாடு, இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை பெயரிட்டது.

தங்கள் முன்னாள் கேப்டன் விஜய் சங்கரை நீக்குவதற்கு தைரியமான முடிவை எடுத்து பாபா அபராஜித்திடம் அணித்தலைமைத்துவத்தை ஒப்படைத்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி தொடங்க உள்ள தொடருக்கு நடப்பு சாம்பியன்கள் கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் வென்ற அணியில் இருந்து தங்கள் கேப்டனை நீக்கிவிட்டு, பாபா அபராஜித்திடம் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது.

2019 உலகக் கோப்பை நட்சத்திரம் விஜய் சங்கர் காயத்திலிருந்து திரும்பிய பிறகும் முழு உடற்தகுதியை மீண்டும் பெறத் தவறிவிட்டதாகக் கூறி, உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக தேர்வாளர்கள் அவரை நீக்கியுள்ளனர்.

 

இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .

பி அபராஜித் (கேப்டன்), எம்எஸ் வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பி சாய் சுதர்சன், டி நடராஜன், எம் ஷாருக் கான், ஆர் சாய் கிஷோர், ஆர் சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர், எம் சித்தார்த் , வருண் சக்ரவர்த்தி, ஜே சுரேஷ் குமார், சி ஹரி நிஷாந்த், ஆர் சிலம்பரசன், எம் அஷ்வின், ஜி அஜிதேஷ்.

 

 

 

 

Previous articleT20 உலக கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் -அதிரடி மாற்றங்கள்..!
Next articleஇலங்கையின் உலக கிண்ண அணி தேர்வு -விளையாட்டுத் துறை அமைச்சர் விபரம்..!