ஜடேஜாவை போன்ற இந்த ‘பிட்ஸ் அண்ட் பீஸ்’ வீரர் ஏன் அணியில் எதற்கு – ஷேன் வார்ன் மாற்றச் சொல்லும் இங்கிலாந்து வீரர்..!

ஜடேஜாவை போன்ற இந்த ‘பிட்ஸ் அண்ட் பீஸ்’ வீரர் ஏன் அணியில்  – ஷேன் வார்ன் மாற்றச் சொல்லும் இங்கிலாந்து வீரர்..!

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையே யான அடுத்துவரும் 2 டெஸ்ட்டிலும் சாம் கர்ரான் அணிக்கு தேவையில்லை என அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

“கர்ரான் [அடுத்த டெஸ்டில்] விளையாடுவதை நான் விரும்பவில்லை.

நான்காவது சீமராக விளையாடும் கர்ரான் பேட்டிங்கில் 8 வது இடத்தில் இறங்கி அவர் சதம் அடிக்கவோ அல்லது பந்துவீச்சில் 5 விக்கட் வீழ்த்தவோ போவதில்லை.

அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை . அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் “பிட்ஸ் அண்ட் பீஸ்”- Bits & Pieces

 

அதற்கு பதிலாக வூட் அல்லது ஸ்பின்னராக இருந்தாலும் நல்லது,  ஒருவேளை லீச் அல்லது பார்கின்சன் ஆகியோரையும் முயற்சிக்கலாம் என வார்ன் ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் தெரிவித்தார்.

முழு நிறைவு இல்லாத அரைகுறை வீரர்களை கிருக்கட்டில் இவ்வாறு Bits and pieses என அழைக்கப்படுவது வழமையானது, ஜடேஜாவை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் இதேபோன்று தொடர்ந்து வர்ணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஹசரங்கவின் அதிரடியில் தனஞ்செய டி சில்வா தலைமையிலான அணி இலகு வெற்றி ..!
Next articleநெய்மரை வெளியில் எடுத்து மெஸ்சியை களமிறங்கிய PSG கழகம்- முதல் போட்டியில் PSG அபார வெற்றி ..!