ஜிம்பாப்வேக்கு எதிராக பங்கேற்கவுள்ள இந்திய அணி ..!
ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு லோகேஷ் ராகுலிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியின் துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார்.
ஜிம்பாப்வே தொடருக்கு ஏற்கனவே அணித்தலைவராக ஷிகர் தவான் பெயரிடப்பட்டிருந்த நிலையில் லோகேஷ் ராகுலின் உடல்நிலை தேறிய காரணத்தால், ஷிகார் தவான் இடமிருந்து லோகேஷ் ராகுலுக்கு தலைமைத்துவம செல்வதாகவும் உதவித் தலைவராக தவான் செயல்படுவார் எனவும் இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் பல பிரபல வீரர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தற்போதைய வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தப் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ராகுல் திரிபாதி இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, போட்டியில் இணையும் ஜிம்பாப்வே அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 17 வீரர்கள் கொண்ட இந்த அணிக்கு ரெஜிஸ் சகபாவா கேப்டனாக உள்ளார். வங்கதேச போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷிகந்தர் ரஷாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி
கேஎல் ராகுல் (C) ஷிகர் தவான் (VC), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்
ஜிம்பாப்வே அணி
பர்ல் ரியான், சகப்வா ரெஜிஸ் (கேப்டன்), சிவாங்கா தனகா, எவன்ஸ் பிராட்லி, ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், கைடானோ டகுட்ஸ்வானாஷே, மடாண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசரா ஜான், முனியோங்கா டோனி, நகாராவா சிச்சார்ட், நாகராவா சிச்சார்ட், நகாராவ் சிச்சார்ட், , திரிபானோ டொனால்ட்







