ஜிம்பாப்வேயை தோற்கடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட இந்தியர்கள்-வைரல் வீடியோ…!

ஹராரேயில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயை க்ளீன் ஸ்வீப் செய்தது.

கடைசி 6 ஒருநாள் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் தனது மூன்றாவது சதத்தை விளாசிய சிக்கந்தர் ராசாவின் வடிவத்தில் இந்தியாவை ஜிம்பாப்வே பயமுறுத்தியது.

பரபரப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் பின்னர் இந்திய வீர்ர்கள் தமது அறையில் குத்தாட்டம் போட்டனர்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.