ஜூனியர் மீராபாய் சானு, ஒரு இன்ஸ்பிரேஷன் வீடியோ -சமூக வலைதளங்களில் வைரல்..!
டோக்கியோவில் இடம்பெற்று வரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்க கனவை நனவாக்கி கொடுத்திருப்பவர் மீராபாய் சானு.
49 கிலோ கிராம் எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவின் மீராபாய் சானு இந்தியர்களது பதக்க கனவை ஆரம்பித்து வைத்தார்.
49 கிலோ கிராம் எடைப்பிரிவில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற காட்சியையும், நிகழ்வுகளையும் கண்ட இந்தியாவின் சிறுமி ஒருவர் அவரைப் போலவே பளுதூக்கலில் ஈடுபடுகின்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகின.
This is the cutest and the most uplifting video on the internet ❤️pic.twitter.com/3whXUbbo0A
— DK (@DineshKarthik) July 27, 2021
சதீஷ் கிருஷ்ணன் எனப்படும் முன்னாள் இந்திய பளுதூக்கல் சாம்பியன் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர, மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் வீடியோவாக இந்த வீடியோ இப்போது பார்க்கப்படுகிறது.
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று குறிப்பிட்டதைப் போன்று கனவு காண ஆரம்பிக்கிறாள் இந்த சிறுமி எதிர்காலத்தில் பளிதூக்கலில் உலக மகுடம் சூட வாழ்த்துவோம் வாருங்கள்.
This is the cutest and the most uplifting video on the internet ❤️pic.twitter.com/3whXUbbo0A
— DK (@DineshKarthik) July 27, 2021