ஜெர்மனிக்கு எதிரான வரலாற்று வெற்றியில் உணர்ச்சிவசப்பட்டு கூட்டத்திற்குள் குதித்த ஈக்வடார் பயிற்சியாளர்! 🇪🇨🔥
2026 FIFA World Cup தொடரின் குரூப் E பிரிவில், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஈக்வடார் அணி ‘ரவுண்ட் ஆஃப் 32’ நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த மாபெரும் வெற்றியின் போது ஈக்வடார் அணியின் பயிற்சியாளர் செபாஸ்டியன் பெக்காசெஸ் (Sebastián Beccacece) செய்த கொண்டாட்டம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது:
ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் கோன்சலோ பிளாட்டா வெற்றிக்கான 2-வது கோலை அடித்தவுடன், பயிற்சியாளர் செபாஸ்டியன் பெக்காசெஸ் உணர்ச்சிப் பெருக்கால் மைதானத்தின் தடுப்பு வேலிகளைத் தாண்டி ரசிகர்களின் கேலரிக்குள் (Stands) குதித்தார்.
அந்தப் பரபரப்பான சூழலிலும், கேலரியின் முன் வரிசையில் அமர்ந்திருந்த தனது மனைவியைக் கண்டுபிடித்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் கடும் விமர்சனங்களைச் சந்தித்த பெக்காசெஸ், “குழு சுற்றை தாண்டாவிட்டால் பதவிய விலகுவேன்” என சவால் விட்டிருந்தார். தற்போது இந்த அசாத்திய வெற்றியின் மூலம் அவர் FIFA World Cup தொடரின் புதிய கதாநாயகனாக மாறியுள்ளார்!
#SebastianBeccacece #Ecuador #FIFAWorldCup2026 #WorldCupCelebration







