ஜோ ரூட்டுக்கு இணையான திறமைகொண்ட ஸ்ரேயாஸ்..!

உண்மையில் ஸ்ரேயாஷின் டெஸ்ட் பேட்டிங் அப்ரோச் ஜோ ரூட் அளவில் தைரியமாகவும், ஷாட்ஸ் செலக்சனும், டைமிங்கும் பிரமாதமாய் இருக்கிறது.

ஆப்-ஸைடில் ரன் சேர்த்தும் ஷாட்ஸ்களுக்கு தைரியமாய் போவதோடு ஷாட்ஸ்களை எளிதாய் ஆடுகிறார். தடுப்பாட்டமும் உறுதியாகவே இருக்கிறது.

ஸ்ரேயாஷை களத்தில் ரன் இல்லாமல் வைத்திருப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான வேலை. அவர் தொடர்ச்சியாய் ரன் தேடிக்கொண்டே இருக்கிறார். உள்நாட்டு போட்டிகளிலும் சிறந்த தரத்தைக் கொண்டிருந்தார்.

ரன் அழுத்தம் இல்லாத ரெட்-பால் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஷ் இந்தியாவிற்கு மிக முக்கியமான வீரராக வளர்வதற்கான அடிப்படைத் திறமைகளைக் கொண்டவராகவே தெரிகிறார். மேலும் ஒரு இன்னிங்ஸை பில்ட் செய்து ஆடும் திறமையுள்ள வீரர். அணித் திட்டங்களோடு, தனித் திட்டங்களும் கொண்டிருக்கின்ற கிரிக்கெட் அறியுள்ள வீரர்.

இத்தனை இருந்தும் ஷார்ட்-பாலில் இருக்கும் தனது பலகீனத்தால்தான் இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்திருக்கிறார்.

நான் இரண்டு நாட்களுக்கு முன் எழுதியிருந்தது போல, அவர் ஷார்ட்-பாலோடு முதலில் மோதிப் பார்க்க செய்வார். வெற்றி பெற்றால் தொடர்வார். இல்லையென்றால் ஷார்ட்-பாலை கீப்பருக்கு விடும் நுட்பம் பழகுவார்.

அவருக்கு ஷார்ட்-பால் தொடர்பாக அறிவுரை சொல்லக்கூடியவர்களும், அவரின் வயதையும், அவரை இந்திய அணி நிர்வாகம் எதிர்கால வீரராகப் பார்ப்பதையும் கருத்தில் கொண்டு, முதலில் ஷார்ட்-பாலை எப்படி ஆடுவதென்றே சொல்லுவார்கள். அதில் அவர் தேறாமல் போனால் அடுத்து ஷார்ட்-பாலை விடும் நுட்பங்களைச் சொல்லுவார்கள்.

இன்று இங்கிலாந்தின் தனக்கெதிரான ஷார்ட்-பால் வியூகத்தோடு மோதவே செய்தார். அப்படித்தான் அவர் செய்வார். அணி நிர்வாகத்திலும் அப்படித்தான் ஆரம்பத்தில் வழிக்காட்டுவார்கள். போகப்போக ஷார்ட்-பாலை ஆடுவதில் தேறுவார், இல்லை விடுவதில் தேறுவார்.

டெஸ்ட் போட்டிகளுக்குத் தகுதியில்லாத பேட்ஸ்மேன் என்றெல்லாம் ஸ்ரேயாஷை ஒதுக்கிவிட முடியாது!

Richards