டாஸ்-ஆல் தான் தோற்றோம்.. தோல்விக்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

டாஸ்-ஆல் தான் தோற்றோம்.. தோல்விக்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியது.டாஸ் வென்ற டெல்லி அணி லக்னோவில் முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுக்க, இந்த இலக்கை டெல்லி அணி 17.5 ஓவர்கள் எல்லாம் எட்டி அசத்தியது.

இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் இன்றைய ஆட்டத்தில் ஒரு 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கின்றேன். அது மட்டும் இல்லாமல் டாஸ் இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

யார் இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக உதவிகள் கிடைக்கின்றது. எங்களால் போதிய அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை. லக்னோவில் எப்போதுமே இது நடக்கின்றது. இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. இதுதான் இங்கு நிலைமையாக இருக்கின்றது.

எனினும் இதையெல்லாம் ஒரு காரணமாக நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. இதிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஆயுசை இம்பேக்ட் வீரராக பயன்படுத்துகின்றோம். மாயங் யாதவ்க்கு இன்னும் சில நேரம் பயிற்சி தேவைப்படுகின்றது. சரியான நேரத்தில் அவர் அணிக்குள் வருவார் என்று நம்புகின்றேன்.

தற்போது தான் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி இருந்து வந்திருக்கின்றார். அதிரடி வீரர் ஒருவரை களத்திற்கு அனுப்புவதற்காக தான் மில்லரை நான் கொண்டு வந்தேன். ஆனால் பந்து நின்று வந்ததால் எந்த பேட்ஸ்மேனாலும் ரன் அடிக்க முடியவில்லை. எங்கள் அணியில் சிறந்த காம்பினேஷன் எது என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று ரிஷப் பண்ட் கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 12 புள்ளிகள் உடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. குஜராத் 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும் அதிக ரன் ரேட் உடன் இருப்பதால் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. ஆர்சிபி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் லக்னோ 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

Previous articleசிரித்து கொண்டே பேச வந்த கொயங்கா.. நிற்காமல் சென்ற கேஎல் ராகுல்.. அவமானப்பட்ட இடத்திலேயே பதிலடி!
Next article17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடியதை கண்டித்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்?