யோவ் RCBக்காரா என்னய்யா இந்த அடி அடிக்கிற கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம! பாவம்யா வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள், அவனுங்களோட ஊர்ல வெச்சு இந்த சாத்து சாத்துறியே என்ன டிம் டேவிட் நியாயமா இதெல்லாம்??
20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் டேவிட் 👏👌
இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஜோஸ் இங்கிலீஷ் 43 பந்துகளில் சதம் அடித்ததே , 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் அதிவேக சதமாக இருந்தது!
ஜோஸ் இங்கிலீஷ் சாதனையை முறியடித்து தான் புதிய சாதனை படைத்திருக்கிறார் டிம் டேவிட் 😎
முன்னதாக அதிவேகமாக அரசு சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையும் டிம் டேவிட் படைத்தார்! டிம் டேவிட் 16 பந்துகளில் 50 ரன்களை கடந்து இருந்தார்!
உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு எதிராக, 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் அபிஷேக் சர்மாவுடன் பகிர்ந்து உள்ளார்! அபிஷேக் சர்மாவும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 37 பந்துகளில் சதம் அடித்து உள்ளார்!
இந்த வகையில் இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக
35 பந்துகளிலும்,
2017 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 35 பந்துகளிலும் சதம் அடித்ததே,
20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனின் அதிவேகமாக சதமாக உள்ளது 🔥
டிம் டேவிட் இந்த போட்டியில் 11 சிக்ஸர்கள் அடித்திருந்தார்! அவர் அடித்த சிக்ஸர்கள் போன தூரம் 👇
முதல் சிக்ஸ் – 83 M
2-வது சிக்ஸ் – 96 M
3-வது சிக்ஸ் – 77 M
4-வது சிக்ஸ் – 90 M
5-வது சிக்ஸ் – 101 M
6-வது சிக்ஸ் – 89 M
7-வது சிக்ஸ் – 96 M
8-வது சிக்ஸ் – 90 M
9-வது சிக்ஸ் – 94 M
10-வது சிக்ஸ் – 82 M
11-வது சிக்ஸ் – 80 M
டிம் டேவிட் அடித்த 11 சிக்ஸர்களும் 75 மீட்டருக்கு மேல் தான் சென்றிருக்கிறது என்றால் அவருடைய ஹிட்டிங் எபிலிட்டி பற்றி நமக்கு தெரிய தேவையில்லை என்று நினைக்கிறேன்! ஏனென்றால் டிம் டேவிட் அந்த அளவிற்கு வலிமையானவர்!!
#timdavid #australiacricket #AUSvsWI #ausvswit20 #t20cricket #cricketlovers
✍️ Sathya kumaran