டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அதிரடியில் இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அதிரடியில் இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணி அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் இணை அதிரடியா தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் 15.2 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இருப்பினும் இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#ABDH

Previous articleநியூசிலாந்துடனான தொடரில் அதிரடி மாற்றங்களுடன் புதிய அணியைக் களமிறக்கப்போகும் இந்தியா…!
Next articleஒருநாள், டெஸ்ட் அணிக்கான கேப்டன்சியிலிருந்து விராட் வெளியேற கூடாது – வீரேந்திர சேவாக்