டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தான் கூட செய்யாத சாதனையை செய்து காட்டிய இலங்கை
2024 டி20 உலக கோப்பை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த நிலையில் இதுவரை நடந்த எட்டு டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஒட்டுமொத்தமாக அதிக வெற்றி பெற்ற அணி எது என்ற புள்ளி விவரத்தை பார்க்கும் போது அனைவருக்கும் ஆச்சரியம் காத்துக் கொண்டுள்ளது.
டி20 உலக கோப்பையை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை தொடர்களில் வெற்றிகரமான அணிகளாக இருந்துள்ளன. ஆனால், இந்த அணிகளை எல்லாம் முந்திக் கொண்டு இலங்கை அணி அதிக வெற்றிகளை பெற்ற அணியாக வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.55 லட்சம் சம்பளமே அதிகம்தான்.. பணம் வந்தாலும் தரையில் நடக்க பழகுங்கள்.. ரிங்கு சிங் ஓபன் டாக்! ரூ.55 லட்சம் சம்பளமே அதிகம்தான்.. பணம் வந்தாலும் தரையில் நடக்க பழகுங்கள்.. ரிங்கு சிங் ஓபன் டாக்!
2007 முதல் 2022 வரை நடந்த 8 டி20 உலக கோப்பை தொடர்களில் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 51 போட்டிகளில் விளையாடி அதில் 31 வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இலங்கை அணி அரை இறுதி சுற்றுக்கு கூட முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த அணி அதிக வெற்றிகளை குவித்துள்ளது. அந்த அணியின் வெற்றி சதவீதம் 61.76 ஆகும்.
அது மட்டுமின்றி டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய அணியும் இலங்கை தான். அந்த அணி 51 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பாகிஸ்தான் அணி 47 போட்டிகளில் விளையாடி 28 வெற்றிகளை பெற்றுள்ளது, இந்தியா 44 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்றுள்ளது. அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் பட்டியலில் இலங்கை முதலிடமும், பாகிஸ்தான் இரண்டாவது இடமும், இந்தியா மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.
அதிக வெற்றிகளை இலங்கை அணி பெற்றிருந்தாலும், அதிக வெற்றி சதவீதத்தை பெற்ற அணிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 63.95 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 62.50 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது. இலங்கை அணி 61.76 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.







