டி20 கிரிக்கெட்டில் அதிரடி வீரர்களுக்கு தான் வாய்ப்பு வருகிறது.. ஐபிஎலில் விளையாட ஆசை – ஸ்மித்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் தற்போது டி20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். 35 வயது ஆன ஸ்மித் அனுபவ வீரராக இருந்தாலும், நடந்து முடிந்த 2024 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்படவில்லை.
இதனால் மணமுடைந்த ஸ்மித் தமக்கு டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாட் தெரியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் அணிக்கு களமிறங்கிய ஸ்மித் 336 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார்.
ஸ்ட்ரைக் ரேட் 148 என்ற அளவிலும், சராசரி 56 ஆகவும் ஸ்மித் வைத்திருந்தார்.இதன் மூலம் வாஷிங்டன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், சர்வதேச டி20 கிரிக்கெட் பற்றி எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் அதில் நான் விளையாடுகிறானா இல்லையா என்பதை தேர்வு குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும்.
டி20 உலக கோப்பையில் நான் சேர்க்கப்படாத நினைத்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் வாழ்க்கையில் இவ்வாறு தான் சில விஷயங்கள் நடக்கும். டி20 அணியில் அனைத்து வீரர்களுமே அதிரடி வீரராக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். தற்போது நான் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட ஆசைப்படுகிறேன். என்னுடைய பெயரை வரும் மெகா ஏலத்தில் நான் பதிவு செய்வேன். எந்த அணிக்காக விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை.
ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும்.
இதை போல் நான் எந்த பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டும் என்பதை கேப்டனும் அணியின் பயிற்சியாளரும் தான் முடிவு செய்ய வேண்டுமே, தவிர அதில் நான் தலையிட ஒன்றுமே இல்லை. தொடக்க வீரராக களமிறங்கும் போது புதிய பந்து எதிர்கொண்டு விளையாடுவது கொஞ்சம் சவாலான விஷயம்.
இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. அணி நிர்வாகம் எதை சொல்கிறதோ அதை தான் செய்வேன் என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய ஒரு நாள் அணியில் ஸ்மித் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.