டி20 மட்டுமல்ல’.. ஒருநாள், டெஸ்டிலும் இனி ஜடேஜாவுக்கு மாற்று இவர்தான்: புது வீரரை தேர்வுசெய்த பிசிசிஐ?

டி20 மட்டுமல்ல’.. ஒருநாள், டெஸ்டிலும் இனி ஜடேஜாவுக்கு மாற்று இவர்தான்: புது வீரரை தேர்வுசெய்த பிசிசிஐ?

இந்திய அணியில், இனி படிப்படியாக இளம் வீரர்களுக்கு ரெகுலர் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய டி20 அணியில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவித்துவிட்டனர்.
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கான மாற்று வீரர்களுக்கு பஞ்சமே இல்லை. டாப் ஆர்டரில் ஆடக் கூடிய இளம் வீரர்கள், மிக மிக அதிகமாகவே இருக்கிறார்கள்.
ரவீந்திர ஜடேஜாவுக்கான மாற்று வீரரை தேர்வு செய்வதுதான் மிகவும் கஷ்டம். அக்‌ஷர் படேல் இருப்பதாலும், அஸ்வின் இனி படிப்படியாக ஓரங்கட்டப்படுவார் என்பதாலும் வலது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்தான் ஜடேஜாவுக்கு மாற்றாக இருக்க முடியும்.
தற்போதைய இந்திய அணியில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்படக் கூடிய இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்றால் அது வாஷிங்டன் சுந்தர்தான்.
இதனால்தான், வாஷிங்டன் சுந்தருக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடியே பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பி வருகிறார். பேட்டிங்கிலும் அபாரமாக ஆடக் கூடியவர்தான்.
வாஷிங்டன் சுந்தர் இதற்குமுன், 2020/21 டெஸ்டில் ஆஸிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். அதேபோல், 2021-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் அபாரமாக பேட்டிங் செய்து, 6 இன்னிங்ஸ்களில் 3 அரை சதங்களை அடித்திருந்தார். டி20-யிலும் அதிரடியாக பேட்டிங் ஆடக் கூடியவர்தான்.
இந்நிலையில், இலங்கை தொடரை தேர்வுசெய்ய நடைபெற்ற தேர்வுக்குழு மீட்டிங்கின்போது, இனி ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கு மாற்றாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தரைதான் ஆட வைக்க வேண்டும் என ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனராம்.

ஜடேஜாவின் இடம் இனி உங்களுக்குதானா என ஜிம்பாப்வே தொடரின்போது பத்திரிகையாளர் கேட்க அதற்கு, ‘‘நான் ஒவ்வொரு நாளும் 100 சதவீத உழைப்பை போட்டு விளையாடக் கூடியவன். அதுதான் எனக்கு பிடிக்கும். எனது திறமைக்கு ஏற்றார்போல், வாய்ப்புகள் கிடைக்கும். யாருடன் என்னை ஒப்பிட வேண்டாம்’’ என சுந்தர் தெரிவித்தார்.

ஜூலை 27 முதல் துவங்கும் இந்தியா, இலங்கை இடையிலான டி20, ஒருநாள் தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாட உள்ளது. இதில், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் லெவன் அணியில் இடம்பெற்று விளையாட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது