டெல்லி காப்பிட்டல்ஸ் அணிக்கு யார் தலைவர் ?
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவருமான சிரேயாஸ் ஐயர் இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியின்போது உபாதையடைந்துள்ளார்.
இதன்காரணமாக IPL போட்டிகள் முழுவதையும் தவறிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதனால் டெல்லி அணியின் தலைவர் யார் எனும் கேள்வி உருவாகியுள்ளது.
பான்ட் தலைவராக நியமிக்கப்படலாம் எனும் கருத்துக்கள் இருந்தாலும் அந்த அணியில் ஸ்மித், அஷ்வின், தவான், ரஹானே போன்ற IPL முன்னாள் அணிகளின் தலைவர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.