மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதி 2.7 இன் கீழ் லெவல் 2 குற்றத்தை பான்ட் ஒப்புக்கொண்டார் மற்றும் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
இதேநேரம் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸைச் சேர்ந்த ஷர்துல் தாக்கூருக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தாக்கூர் ஐபிஎல் நடத்தை விதி 2.8 இன் கீழ் லெவல் 2 குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் தண்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிடல்ஸின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்காக ஒரு போட்டி தடையையும் சந்திக்க நேரிடும். ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2 இன் கீழ் லெவல் 2 குற்றத்தை ஆம்ரே ஒப்புக்கொண்டார் மற்றும் தவறை ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.