டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பாஸ்ட் பவுலர்கள் பட்டியல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பாஸ்ட் பவுலர்கள் பட்டியல்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டியது முக்கியம்.

அதனால் தான் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அப்படி 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது மிகவும் சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு பின்னால் பல உழைப்பு இருக்கிறது. ஒரு விக்கெட் எடுப்பதற்கும் பல திட்டமிடுதல் இருக்கின்றது.

குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய கண்டத்தில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வேகமாக ஓடி வந்து பந்து வீசுவதெல்லாம் முடியாத காரியம். ஆனால் அந்த வேகத்திலும் ஓடிவந்து பந்து வீசினால் அது ஆடுகளத்தில் எடுபடவே படாது.

பந்து புதிதாக இருக்கும் மூன்று ஓவர் வரைதான் பாஸ்ட் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் கையே ஓங்கி இருக்கும். இந்த சூழலில் தான் ஆசிய ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்கள் எடுக்க ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒரு நுணுக்கத்தை வேகப்பந்துவீச்சாளர்கள் கண்டுபிடித்தனர்.

அதாவது பந்தை ஒரு புறம் மட்டும் பழையதாக்கி மறுபுறம் புதிதாக வைத்துக் கொண்டு பழையதாக இருக்கும் பகுதி ஆடுகளத்தில் பட்டு எகிறும் வகையில் பந்து வீச வேண்டும். அப்போது பந்து ஸ்டெம்பை நோக்கி சீறி பாய்ந்து வரும். இதனை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். இதனால் இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்றால் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் என்ற யுத்தியை பயன்படுத்தி ஆக வேண்டும்.

வெளிநாட்டு ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதும் இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கும் பல வித்தியாசம் இருக்கிறது. இந்த சூழலில் இப்படி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பிறந்து வளர்ந்து சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பாஸ்ட் பவுலர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். 119 இன்னிங்ஸ் விளையாடி 219 விக்கெட்களை வீழ்த்தி இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஒரு காலத்தில் இந்தியாவில் முன்னணி பவுலராக இருந்த ஸ்ரீநாத் 57 இன்னிங்ஸில் 108 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஜாகீர் கான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் 70 இன்னிங்சில் 104 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் வேக பந்துவீச்சாளர் இசாந்த் ஷர்மா இருக்கிறார். அவர் 77 இன்னிங்ஸில் 104 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உமேஷ் யாதவ் இருக்கிறார். உமேஷ் யாதவ் 64 இன்னிங்சில் விளையாடி 101 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் கர்ஷன் காவ்ரி இருக்கிறார். இவர் ஐம்பது இன்னிங்ஸில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் முகமது சமி இருக்கிறார். இவர் 42 இன்னிங்சில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா இதுவரை இந்தியாவில் எட்டு போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

 

 

Previous articleஇந்திய அணியால் தலைகுனிவு.. 10 வருடமாக தோல்வி.. பசியுடன் இருக்கிறோம்.. நாதன் லியோன் ஓபன் டாக்
Next articleஇதான் ட்விஸ்ட்.. இந்திய அணியில் நண்பன் இடத்தை பிடிக்கப் போகும் இஷான் கிஷன்.. பிசிசிஐ முடிவு