டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வரும் பெருத்த நெருக்கடி…!

டெஸ்ட் உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பலத்த நெருக்கடி நிலை வந்திருக்கிறது.

அடுத்த மாதம் சவுத்தாம்டன் மைதானத்தில் 18 ம் திகதி இடம்பெறவிருக்கும் இந்தப்போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு பலத்த கொரோனா கெடுபிடி நிலைமை வித்திக்கப்பட்டிருக்கின்றது. மொத்தமாக 24 நாட்கள் இந்திய வீரர்கள் கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படப் போகிறார்கள்.

 

 

இந்தியாவின் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் 10 நாட்களும் கட்டாய தனிமைப்படுத்தலை இந்திய வீரர்கள் சந்திக்க போகிறார்கள்.

இதன் காரணத்தால் இந்திய வீரர்களுக்கு மனோ ரீதியாக இதுவொரு நெருக்கடிக்குரிய விடயமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

இத்தனையும் கடந்து இந்திய போட்டியில் ஜெயிப்பதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, அதேநேரம் நியூசிலாந்து அணி, குறித்த இறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தில் அந்த அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை அவர்களுக்கான சீதோஷ்ண நிலைமைகளை சாதகமாக்க பயன்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை(மே 19) முதல் கொண்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு, ஜூன் மாதம் 2 ம் திகதி இந்திய மகளிர் அணியுடன் சேர்ந்தே ஒரே விமானத்திலேயே பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.