டேனியல் வெட்டோரி பிளேஆஃப்களுக்கு தகுதிபெறும் 4 அணிகளை கணித்தார், SRH க்கு வாய்ப்பில்லையாம்…!

டேனியல் வெட்டோரி பிளேஆஃப்களுக்கு தகுதிபெறும் 4 அணிகளை கணித்தார், SRH க்கு வாய்ப்பில்லையாம்…!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, 2022 ஐபிஎல் சீசனின் ப்ளே-ஆஃப்களுக்குச் செல்லும் நான்கு அணிகளை  கணித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டிக்குப் பிறகு அவர் தனது கணிப்புகளை வழங்கினார்.

 

சுவாரஸ்யமாக, ஐபிஎல் 2022 இல் தற்போது ஐந்து போட்டிகளில் வெற்றிப் பாதையில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர் குறித்த 4 அணிகளுள் சேர்க்கவில்லை .

வெட்டோரியின் கூற்றுப்படி, ஐபிஎல் 2022 பிளேஆஃப்களுக்கு தகுதிபெறும் நான்கு அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் இருக்கும். ESPNCricinfo உடனான உரையாடலின் போது வெட்டோரி தேர்ந்தெடுத்த அடுத்த இரண்டு அணிகள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

டேனியல் வெட்டோரி தேர்ந்தெடுத்த நான்கு அணிகளின் தற்போதைய நிலைகளைப் பற்றி பேசுகையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிகிறது. இருப்பினும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளில் எந்த இரண்டு அணிகள் தகுதி பெறும் என்று கணிப்பது கடினம்.

பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கும் தகுதி வாய்ப்பு உள்ளது, அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் சிறிய வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது.

முன்னாள் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐபிஎல் 2022ல் எட்டு தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அவர்களின் பேட்டிங் வரிசையை மாற்ற நினைக்க வேண்டும்.

வெட்டோரியின் கூற்றுப்படி, ரோஹித் சர்மா தொடக்க இடத்திலிருந்து மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

வெட்டோரியின் ஆலோசனையை ரோஹித் சர்மா பின்பற்றுகிறாரா என்பது இனிவரும் நாட்களில் சுவாரஸ்யமாக இருக்கும்.