டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் தன்னுடைய முடிவை அறிவித்தார் ரோஜர் பெடரர்!

டென்னிஸ் உலகில் நட்சத்திர வீரராக வலம் வரும் சுவிஸ்லாத்தின் ரோஜர் ஃபெடரர் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் வருகின்ற ஜூலை மாதம் 23 தொடக்கம் ஆகஸ்ட் 8 ம் திகதி வரைக்கும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த ஆண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன, இந்த நிலையில் சுவிஸ்லாத்தின் ரோஜர் ஃபெடரர் தனது கருத்துக்களை பரிந்துரைக்கிறார்.

குறிப்பாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு இன்னும் சரியான தீர்மானம் எதனையும் தரவில்லை ,ஜப்பானில் கொரோனாவினுடைய தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் ,இரண்டு மாதங்களுக்குள் இவர்கள் தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும் என்கின்ற கருத்தை பெடரர் தெரிவித்துள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தான் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதற்கான வாய்ப்புக்கள் சரியாக அமையுமா எனும் ஐயப்பாடு இப்போதுவரை காணப்படுகின்றது ஆகவே அது நடைபெறவில்லையாயின் அதனை நான் ஏற்றுக்கொள்வேன் எனவும் பெடெர்ர் தெரிவித்தார்.

Previous articleT20 உலக கிண்ணத்தில் மாலிங்க விளையாடுவாரா- தலைமை தேர்வாளர் தகவல் வெளியிட்டார்.
Next articleகோலி, வில்லியம்சனை ஒப்பிட்டு இந்தியர்களை வம்புச் சண்டைக்கு இழுத்த வோகன்