“தப்பே பண்ணாத எனக்கு தண்டனையா?”.. இஷான் கிஷன் வெறியாட்டம் ஆட காரணமே இதுதான்.. என்ன நடந்தது?

“தப்பே பண்ணாத எனக்கு தண்டனையா?”.. இஷான் கிஷன் வெறியாட்டம் ஆட காரணமே இதுதான்.. என்ன நடந்தது?

இந்திய அணியால் ஓரங்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே தீப்பொறியை பற்ற வைத்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 45 பந்துகளில் சதம் அடித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் மிரட்டி இருக்கிறார்.

எந்த தவறுமே செய்யாத அவரை இந்திய அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளது. அவருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்காமல் நீண்ட காலம் மாற்று வீரராக அலைகழிக்கப்பட்ட பின்னர் அவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கியது. இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெறாததால் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவரை அணியிலிருந்து விடுவித்தது.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனை வாங்க மும்பை அணி முயற்சித்தாலும் அதிக விலை சென்றதால் அவரை வாங்க விரும்பவில்லை. அவரை தக்க வைக்க ஆர்டிஎம் கார்டையும் பயன்படுத்தவில்லை. ஆனால், சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவியா மாறன் இஷான் கிஷன் மீது அதிக நம்பிக்கை வைத்து ஏலத்தில் போட்டி போட்டு வாங்கினார். அதுவும் 11.25 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கினார். அப்போது மிக தவறான முடிவாக பார்க்கப்பட்டது.

இஷான் கிஷன் சரியாக விளையாட மாட்டார், ஃபார்மில் இல்லை என்பது போன்ற ஒரு பிம்பம் அப்போது இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரில் தன்னை நம்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் ஆடிய ஆட்டம் மிரட்டலாக அமைந்தது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்தால் 300 ரன் என்ற இலக்கோடு வெறிகொண்டு ஆடியது. அனைத்து பேட்ஸ்மேன்களும் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டி ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன் நிலைத்து நின்று ஆடினார்.

மற்றவர்கள் அதிரடியாக ஆடினாலும் விக்கெட்களை இழந்தனர். ஆனால் இஷான் கிஷன் நங்கூரமாக நின்று ஆடினார். அவர் 45 பந்துகளில் சதம் அடித்தார். ஆட்டம் முடிவில் 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார். 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 225.53 என்பதாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் எடுக்காவிட்டாலும் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இஷான் கிஷன் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துக்கும் மிகப்பெரிய செய்தியை சொல்லி இருக்கிறார். இதே ஃபார்மை அவர் அடுத்து வரும் போட்டிகளிலும் தொடர்ந்தால் நிச்சயமாக இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இனியும் இஷான் கிஷனை ஒதுக்கி வைக்க முடியாது.

Previous articleதோனியிடம் குசும்பு வேலை செய்த தீபக் சாஹர்.. தோனி பேட்டால் அடித்த காரணமே இதுதான்.. என்ன நடந்தது?
Next articleமகளிர் கிரிக்கெட்: முத்தரப்பு தொடர்: திருத்தப்பட்ட அட்டவணை