தமிழ்நாடு பிரீமியர் லீக் – மான்கட் ரன்அவுட் , நடுவிரலை தூக்கி காட்டிய CSK வீரர்..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2022 ஜூன் 23, வியாழன் அன்று சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலில் விறுவிறுப்பாகத் தொடங்கியது.

தமிழ்நாட்டு நட்சத்திரங்களான பாபா அபராஜித் மற்றும் என் ஜெகதீசன் இருவரும் காரசாரமான நடவடிக்கை பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

அபராஜித் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ஜெகதீசனை மான்கட் முறைமூலமாக ரன் அவுட் செய்தார்,

ரன் அவுட் ஆன போதிலும் விரக்தியை வெளிப்படுத்திய ஜெகதீசன் தனது நடுவிரலைக் காண்பித்துக் கொண்டு வெளியேறியமை பலத்த விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

ஜெகதீசன் IPL போட்டிகளில் தோனி தலைமையிலான CSK அணியில் விளையாடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1947 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் பில் பிரவுனை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினு மன்கட் பிரபலமாக வெளியேற்றிய பிறகு, இம்முறையான ஆட்டமிழப்புக்கள்  பல ஆண்டுகளாக விவாதத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது,

இதவே ICC ஏற்றுக்கொண்ட “மன்கட்” அல்லது “மன்கடிங்” என்று அழைக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.