தலைவராக முதல் போட்டியிலேயே சாதனை படைத்த ஷிகார் தவான்..!

தலைவராக முதல் போட்டியிலேயே சாதனை படைத்த ஷிகார் தவான்..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பித்தது.

இந்த போட்டியில் இந்தியாவின் புதிய தலைவராக விளையாடும் ஷிகர் தவான் புதிய சாதனை படைத்தார், இந்தியாவின் வயது முதிர்ந்த தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.

தலைவரான இன்றைய 143 வது ஒருநாள் போட்டியில் அவருடைய வயது 35 வயதும் 225 நாட்களுமாகும். இதற்கு முன்னர் இந்த சாதனையை மொஹிந்தர் அமர்நாத் தன்வசம் வைத்திருந்தமை கவனிக்கத்தக்கது .

 இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில், இந்தியாவின் இரண்டாம் தர அணி இலங்கையை இலங்கை மண்ணில் தவான் தலைமையில் போட்டிகளில் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக இந்தியாவின் வயது முதிர்ந்து தலைவர் அறிமுகம் எனும் பெருமை  தவான் வசமானது.

Oldest Indian to made ODI Captaincy Debut

S Dhawan – 35yrs 225d*
M Amarnath – 34yrs 37d
S Kirmani – 33yrs 353d
A Wadekar – 33yrs 105d

#INDvSL