திசாரா பெரேரா தேர்ந்தெடுத்துள்ள சிறந்த டி20 அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம் – ஒரு இலங்கை வீரர் கூட இல்லை..!

திசாரா பெரேரா தேர்ந்தெடுத்துள்ள சிறந்த டி20 அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம் – ஒரு இலங்கை வீரர் கூட இல்லை

இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான திசாரா பெரேரா இதுவரை 313
டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 11 அரை சதங்களுடன் இதுவரை மொத்தமாக அவர் 3997 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 151.74 ஆகும்.
அதேசமயம் பந்துவீச்சில் இதுவரை 260 விக்கெட்டுகளை திசாரா பெரேரா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் அனைத்து டி20 தொடரில் விளையாடி உள்ள இவருக்கு நிறைய அனுபவம் உண்டு. தற்பொழுது இவர் தனக்கு பிடித்தமான ஒரு சிறந்த டி20 அணியை வரிசை படுத்தி உள்ளார். திசாரா பெரேரா தேர்ந்தெடுத்த சிறந்த டி20 அணியை தற்போது பார்ப்போம்.

டி20 போட்டிகளை பொறுத்தவரையில் ஸ்பின் பந்து வீச்சு என்று வந்துவிட்டால் அதில் இரண்டு முக்கிய வீரர்களாக பார்க்கப்படுவது சுனில் நரைன் மற்றும் ரஷித் கான் மட்டுமே. இவர்கள் இருவரும் பந்து வீச்சை தவிர்த்து பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இவரது அணியில் ஓபனிங் வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மா உள்ளனர். டி20 போட்டிகளில் முதல் ஓவரில் இருந்தே இமாலய சிக்ஸர்கள் அடிப்பதில் இவர்கள் இருவரும் கை தேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி லெஃப்ட் அண்ட் ரைட் கம்பினேஷன் ஒரு டி20 அணிக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5ஆவது இடத்தில் கில்லர் மில்லர் என்ற செல்லமாக அழைக்கப்படும் டேவிட் மில்லர் இடம் பெற்றுள்ளார். இறுதி நேரங்களில் அணியின் ஸ்கோரை அதிகப் படுத்துவதில் இவர் ஸ்பெஷலிஸ்ட்.

பின்னர் 6ஆவது இடத்தில் எம்எஸ் தோனி இடம் பெற்றிருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இந்த அணியை எம்எஸ் தோனி வழிநடத்துவார் என்று திசாரா பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் மற்றும் ஷான் டைட் இவர்கள் இருவரும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி எதிரணி வீரர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி முக்கியமான கட்டத்தில் இவர்கள் இருவரும் தங்களுடைய சிறப்பான பந்துவீச்சில் மூலமாக விக்கெட்டுகளை கைப்பற்றி திறமை பெற்றவர்கள்.

மறுபக்கம் ராக்கெட் பும்ரா தன்னுடைய யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களின் கால்களைச் சேதப்படுத்துவார். இறுதி ஓவர்களில் இவரது பந்துவீச்சில் ரன்கள் அடிப்பது என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இந்த மூன்று பந்து வீச்சாளர்களும் ஒரு டி20 அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

டி20 போட்டிகளை பொறுத்தவரையில் ஸ்பின் பந்து வீச்சு என்று வந்துவிட்டால் அதில் இரண்டு முக்கிய வீரர்களாக பார்க்கப்படுவது சுனில் நரைன் மற்றும் ரஷித் கான் மட்டுமே. இவர்கள் இருவரும் பந்து வீச்சை தவிர்த்து பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

திசாரா பெரேரா தேர்ந்தெடுத்துள்ள சிறந்த டி20 அணி :

கிறிஸ் கெயில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர் எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ), ரஷித் கான், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, மிச்செல் ஸ்டார்க் மற்றும் ஷான் டைட்