திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டத்தால் வெற்றியை நோக்கி பயணிக்கும் இலங்கை..!

திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டத்தால் வெற்றியை நோக்கி பயணிக்கும் இலங்கை..!

பாகிஸ்தான் அணியுடன் காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி ஆட்டத்தின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும் முதல் போட்டியில் 342 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமது முதல் இன்னிங்ஸில் 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், மிக விரைவாக மீண்டும் பந்துவீச களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் 59 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்த உபதலைவர் தனஞ்சய டி சில்வா, மூன்றாம் நாள் முடிவில் ஸ்கோர்போர்டை 176/5 என உயர்த்தி, இலங்கை அணியை பாகிஸ்தானை விட 323 ஓட்டங்கள் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினார்.

இன்று மாலை 4.20 அளவில் திடீரென போதிய வெளிச்சம் இன்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, ​​திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் களம் இறங்கிய உடனே சில அழகான ஷாட்களை ஆடிய தனஞ்சய டி சில்வா, பாகிஸ்தானியர்களின் பிடியில் சிக்கியிருந்த ஆட்டத்தை காப்பாற்றினார்.

அதன்படி இன்றைய போட்டியின் முடிவில் ஸ்கோர்போர்டு பின்வருமாறு காண்பிக்கப்பட்டது.

இலங்கை முதல் இன்னிங்ஸ் – 378/10
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் – 231/10
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் – 176/5

 

 

 

Previous articleடினேஸ் கார்த்திக் பெயரை சொல்லி முரளி விஜய்யை கிண்டலடித்த TNPL ரசிகர்கள் -வீடியோ இணைப்பு ..!
Next articleஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய திருக்கோணமலை டைனமிக் கழகம்..!