திருகோணமலையிலிருந்து தேசிய அணிக்கு 🔥
தெற்காசிய கால்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய அணியில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவியான குவேதா ❤️
எதிர்வரும் 11 ஆம் திகதி பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய அணியில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவியான குவேதா தெரிவாகியுள்ளதோடு அவர் இன்றைய தினம் பங்களாதேஷ் பயணம் செய்யவுள்ள இலங்கை குழாமுடம் இணைந்து பங்களாதேஷ் பயணமாகிறார்…
இவ் அணியினர்
11.07 பங்களாதேஷ் அணியுடனும்
13.07 பூட்டான் அணியுடனும்
15.07 நேபால் அணியுடனும்
17.07 நேபால் அணியுடனும்
19.07 பங்களாதேஷ் அணியுடனும்
21.07 பூட்டான் அணியுடனும் போட்டியில் பங்குபற்றவுள்ளது….
இந்த பயணத்தில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி இலங்கை அணிக்காக வெற்றியை பெற்றுதருவதோடு திருகோணமலை மண்ணுக்கும் பெருமை சேர்த்துவருவதற்கு வாழ்த்துகள்….
SAFF UN 20 WOMEN’S FOOTBALL CHAMPIONSHIP 2025