திருமலை மண்ணின் மைந்தன் கௌரிதாசன் கின்னஸ் உலகசாதனை ..!
திருமலை மண்ணின் மைந்தனான கௌரிதாசன் கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிலைநாட்டி ஈழத்தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
“50 வயதுக்கு முன்னர் ஒரு சாதனை செய்து விட வேணும் என்பது எனது கனவு. சாதனையாளர்கள் பெயர்கள் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவது சாதனையுலகின் மிகப் பெரிய அங்கீகாரம். எனது பெயரும் அந்தப் புத்தகத்தில் பதியப்பட்டு விட்டது என்பதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
எனது இந்த முயற்சியை நான் பிறந்து வளர்ந்த எனது மண், எங்கள் தலைநகரம் திருகோணமலைக்கு அர்ப்பணிக்கிறேன்.
மிக விரைவில் கின்னஸ் உலக சாதனை சான்றிதழை பதிவேற்றுகிறேன்.
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்? ” என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல கராத்தள மாஸ்டரான கௌரிதாசன் ஈழத்துலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டில் அடைக்கலம் பெற்றாலும் பல்துறைகளில் தன் திறமையை நிலைநாட்டி பைருமை தேடிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.