சென்னை அணியின் முன்னணி வீர்ரான தீபக் சாஹர் NCA இன் மறுவாழ்வின் போது முதுகில் காயம் அடைந்ததால் அவர் ஐபிஎல் 2022 க்கு திரும்புவது சந்தேகமாகத் தெரிகிறது ?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்னுடைய பிரபலமான வீரரான தீபாக் சஹார் பெரும் தொகைக்கு ஐபிஎல் ஏலத்துக்கு இம்முறை சென்னை அணியால் வாங்கப்பட்டார்.
ஆனால் அவர் பெப்ரவரி மாதம் இறுதியாக இந்திய தேசிய அணிக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடியபோது உபாதையால் தேசியக் கிரிக்கெட் அகடமி என சொல்லப்படும் NCA யில் அவர் உபாதையில் இருந்து மீள்வதற்கான பரிகாரங்களை மேற்கொண்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு தடவை தீபக் சஹர் அங்கேயும் உபாதை அடைந்துள்ளதால் அணிக்கு திரும்பும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.
முன்னதாக வருகிற 22ஆம் திகதி தீபாக் சஹார் சென்னை அணியுடன் இணைவார் என தகவல்கள் தெரிவித்தன, சென்னை அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய நிலையில் தீபாக் சஹாரது இழப்பு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.